Monday, June 25, 2012

தமிழ் பேசும் 21 தேசிய கடெற் படை அலுவலர்கள் இரண்டாவது லெப்ட்டினன்டுகளாக நியமனம்

தமிழ் பேசும் 21 தகுதிகாண் நிலை தேசிய கடெற் படை (NCC) அலுவலர்கள் இரண்டாவது லெப்ட்டினன்டுகளாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு சமவாய்ப்பை வழங்கும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப்படுதாகச் தெரிவிக்கப்படுகின்றது.

1980க்கு முன்பு NCC வடபகுதி பாடசாலைகளில் பிரபலமாக இருந்தது. புலிகள் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக ஆட்சேர்ப்புச் செய்த்தைத் தொடர்ந்து NCC மங்கிவிட்டது.

போர் முடிந்த நிலையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில், பாதுகாப்புச் செயலாளரின் பணிப்பின் பேரில் தேசிய கடெற் படைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர RWP RSP உரிய முறையில் செயல்பட்டு வடக்கில் இதனை மீளுயிர்ப்பு செய்துள்ளார். இந்த புதிய கடெற் இரண்டாம் லெப்ட்டினன்கள் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பணியாற்றுவர்.




No comments:

Post a Comment