Saturday, June 30, 2012

வட மாகாண சபைத் தேர்தல் செப்ரெம்பர் 2013ல் - பஸில் ராஜ பக்ஷ

வட மாகாண சபைத் தேர்தலை செப்ரெம்பர் 2013ல் நடத்தவிருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, சந்தித்து உரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாணத் தேர்தலை 2013ல் நடத்துவதற்கு முன்னர், வாக்காளர் பட்டியல் சீராக்கல், மீள்குடியேற்றம் போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு, இந்திய வீடமைப்புத் திட்டம், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை, போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com