2012 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த முதலாம் திகதி முதல் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment