இலங்கையில் கடந்த 4 மாதங்களில் 744 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்ட புதிய கணிப் பீட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமான கிராம பகுதிகளில் உள்ள சிறுவர்களே இவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் குடும்பத்தில் நன்கு அறியப்பட்டவர்கள், அயலவர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களால் சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
90 சதவீதமான சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் வேண்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக சரத் ஜயமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 490 துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன . சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதனால் வழக்கொன்றை விசாரித்து தீர்ப்பு வழங்க 10 வருடங்கள் வரை செல்லக் கூடும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment