Sunday, June 17, 2012

ஜி 20 மாநாட்டில் ஜனாதிபதியைச் சந்திக்கின்றார் மன்மோகன் சிங்.

மெக்சிகோவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியப் மன்மோகன் சிங், சந்தித்துப் பேச உள்ளார். நாளை தொடங்கும் ஜி 20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. ஜி 20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய பொருளாதார பின்னடைவு குறித்தும், இதன் காரணமாக ஏற்படும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில், மெக்சிகோ அதிபர் ‌பி‌லி‌ப்‌பி கா‌ல்டிரா‌ன், ரஷ்ய அதிபர் விளாடி‌‌மீர் புதின், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோரையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து உரையாட உள்ளார்.

இந்த மாநாட்டினைத் தொடர்ந்து, பிரேசிலில் நடைபெற உள்ள புவி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா, வாக்களித்ததைத் தொடர்ந்து முதன் முறையாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. எனவே இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment