சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய 2 ஆயிரம் பேரை, இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய நிலமை தற்போது காணப்படுவதாகவும், இதனால் பிறிதொரு நாட்டில் அகதி அந்தஸ்து கோருவதற்கான தேவை இலங்கையர்களுக்கு இல்லையென, சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
அத்துடன், மாதாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள், சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி வருவதாகவும், எனினும் அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு சமர்ப்பிக்கும் காரணங்கள் நியாயமானவை அல்லவென, சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு, சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கியதாக, சுவிட்சர்லாந்து குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment