இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்: பெண்களின் எண்ணிக்கை அதிகம்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் 36,807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது, இந்த கணிப்பீட்டின்படி 14,022 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதோடு 313 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன.
குடிசன மதிப்பீட்டு பணிகள் 2012 பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது. மொத்த சனத்தொகையில் ஒரு கோடி 3,57,000 ஆண்களும், ஒரு கோடி 5,12,000 பெண்களும் உள்ளனர் என்றார்.
இதன்படி, இலங்கையில் ஆண்களைவிடஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
0 comments :
Post a Comment