Friday, June 22, 2012

இராணுவ உயர் அதிகாரிகளை காட்டிக் கொடுத்த இராணுவ மேஜருக்கு கிடைத்த கூலி 16 இலட்சம்.

ரூபா 16 இலட்சம் பெற்றுக்கொண்டு இராணுத்தின் உயர் அதிகாரிகளான பாரமி குலதுங்க, துவான் முத்தாலிப், மஜீட் ஆகியோரைப் படுகொலை செய்வதற்கு புலி இயக்கத்துக்குத் தகவல்களை வழங்கிய இராணுவ மேஜரான டி. எம். தசநாயகவுக்கெதிராக சட்டமா அதிபர் கொழும்பு பிரதான நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

குறிப்பிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கும் இடம், இருக்கும் இடம் என்பவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நிரோசன் எனப்படும் புலி உறுப்பினருக்கு வழங்கியதாக இவருக்கெதிரான முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com