தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தி உடனடியாக கைது செய்ய வேண்டுமென சட்ட மா அதிபருக்கும் சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பி ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பை மீறிச் செயற்பட எவருக்கும் உரிமையில்லை என தெரிவித்த கலாநிதி குணதாச அமரசேகர, மட்டக்களப்பு மாநாட்டில் சம்பந்தன் தேசத்துரோகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆகவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று சௌசிறிபாயவில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் விஷேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றபோதே குணதாச இக்கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவிக்கையி,ல் மட்டக்களப்பு மாநாட்டில் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சம்பந்தனை அவர் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், சம்பந்தனின் உரையை மையப்படுத்தி அரசியலமைப்பின் 157 சரத்தின் ஏ பிரிவின் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கிணங்க அரசியலில் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. எனவே, முட்டாள்தனமான செயற்பாடுகளை கைவிட்டு இனியேனும் சிங்கள தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றார்
Dr.Gunadasa,this is a waste of space.
ReplyDelete