சுமார் 150 புகலிடக் கோரிக்கை யாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிற்கு 107 கிலோ மீற்றர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வணிகக் கப்பல்களும் தமது கப்பல்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் இந்தோனேசிய பசரானாஸ் நிறுவன கப்பல்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்.
இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்கும் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை' என்று குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் 200 அகதிகளை ஏற்றிய படகொன்று கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 109 பேர் மீட்கப்பட்டு 17 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலரின் நிலை இன்றும் தெரியவராத நிலையில் மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment