Thursday, June 7, 2012

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், அடையாள அட்டைகளை பெற்றுக்கொள் வதற்கான விண்ணப்பங்களை எதிர் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர், சமர்ப்பிக்குமாறு, ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் 16 வயதை பூர்த்தி செய்யும் மாணவர்களும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடிவதுடன் ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயதை பூர்த்தியடையும் மாணவர்கள், தபால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்துள்ளார்.

16 வயது பூர்த்தியடைந்துள்ள மாணவர்கள் மட்டுமல்லாமல், ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியடையும் மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவங்களை எதுவித தாமதமுமின்றி, ஆட்பதிவு திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுபெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நெருங்கும்போது ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக, உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com