கொழும்பு - கிரான்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கிரான்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை மருந்து போத்தல்கள் 87 மற்றும் 210 போதைப் பொருள் திரவ போத்தல்கள் என்பன பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment