130 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது - வெளிவிவகார அமைச்சு
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர் களில், இலங்கையைச் சேர்ந்த 130 பேர் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய மூன்று படகுகள் நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவினை அண்மித்த கடற்பரப்பில் அந்த நாட்டின் கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
அத்துடன், கடந்த புதன்கிழமை இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 93 பேர் அடங்கிய படகொன்றை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அத்துடன், இது தொடர்பாக அவுஸ்திரேலிய நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுசன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment