நூதனசாலை கொள்ளை சம்பவம் தொடர்பாக அறிக்கையை 12ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய நூதனசாலையில் கொள்ளை யிடப்பட்ட புராதன பொருட்கள், மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த குற்றப்புலனாய்வு பொலிஸார், சம்பவத்துடன் தொடர் புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட புராதன பொருட்களில் சில மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அது தொடாபான அறிக்கை, இதுவரை கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கை கிடைத்தவுடன், சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை, வெளிப்படுத்த முடியும் எனவும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை, 18 க்கும் மேற்பட்டோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த கொழும்பு மஜிஸ்திரேட் ரஷ்மி சிங்கப்புலி, வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும், அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment