கிழக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டாம்- வழக்கு விசாரணை ஜூலை 11ல்.
கிழக்கு மாகாண சபையை உரிய காலத்துக்கு முன்பு கலைப்பதை தடைசெய்யும் கட்டளையை ஆளுனருக்கு வழங்க வேண்டுமென கோரி வாக்காளரான பிரியரஞ்சன் அமரசேகர என்பவர் மேன்முறையீடு செய்திருந்த முறைப்பாடு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது விசாரணையை ஜூலை 11ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கின் போது கிழக்கு மாகாண. முதலமைச்சர் சிவனேசதுரை சந்திகாந்தன், மாகாண அமைச்சர்கள் மற்றும் பா.ம.உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
மேற்படி வழக்கு நீதியரசர்களான மேல் நீதிமன்றத் தலைவர் ஸ்ரீ ஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இடம் பெற்றபோது குறித்த முறைப்பாட்டில் குறைபாடுகள் பல இருப்பதால் அதனைத் திருத்தி மீளச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜகத் டி சில்வா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுமதி தர்மவர்தன, ஆகியோர் ஆளுனர் சார்பிலும், முதலாவது பிரதிவாதியான முதலமைச்ச் சி. சந்திகாந்தன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸ் முஸ்தபாவும், முறைப்பாட்டுக்காரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம். சுமேந்திரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
0 comments :
Post a Comment