வீதி அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட 114 பஸ்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை
பொலிஸ் போக்குவரத்து தலைமை யகத்தின் உதவியுடன், தேசிய போக்கு வரத்து ஆணைக்குழுவினால் மேற்கொள் ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வீதி அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட 114 பஸ் வண்டிகள் தொடர்பான விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த பஸ் வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது போன்ற சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுமென தெரிவித்த ஆணைக்குழு, வீதி அனுமதியற்ற பஸ்களில் பயணம் செய்வது பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்பதால் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment