பஸ் ஓன்றின் மீது விமானம் மோதியதில் 10 பேர் பலி
ஆப்ரிக்க நாடான கானாவில் மினி பஸ் ஓன்றின் மீது விமானம் மோதியதில், 10 பயணிகள் பலியாகியுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். நைஜீரியாவின் லாகோஸ் நகரிலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று, கானா நாட்டின் அக்ரா நகர விமான நிலையத்தில், தரையிறங்க விமான நிலையத்தையொட்டிய சாலைப் பகுதியில் தாழப் பறந்த போது, அந்த வழியாகச் சென்ற பயணிகள் பஸ் ஓன்றின் மீது விமானம் மோதியுள்ளது.
இதில்,மினி பஸ் பலத்த சேதமடைந்ததுடன், பஸ்சில் இருந்த பயணிகள் 10 பேர் பலியானதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், விமானமும் சேதமடைந்துள்ளது.
கானா துணை அதிபர் ஜான் ட்ரமானி, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதுடன் சம்பவம் குறித்த விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment