10000-11000 ஆண்டு பழைமைவாய்ந்த எலும்புக்கூடு மீட்பு.
கற்கால யுகத்தை சேர்ந்த புராதன எலும்பு கூடு ஒன்று பாஹியங்கல விஹாரை வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 11 முதல் 10 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மண் படையொன்றிலிருந்து இவ் எலும்பு கூடு மீட்கப்பட்டதாக புதை பொருள் ஆராய்ச்சி திணைக்கள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். களுத்துறை, கல்லென் விஹாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியின் போதே இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டது.
ஆசிய கண்டத்தில் இது போன்ற பழைமை வாய்ந்த எலும்பு கூடு ஒன்று மீட்கப்பட்டமை இதுவே முதல் தடவையொன புதை பொருள் ஆராய்ச்சி திணைக்கள நிபுணர்கள் தெரிவித்துள்ளனனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட்டு தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம்பெறுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்வாராய்ச்சியின் போது புராதன பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment