Friday, June 1, 2012

நகை வியாபாரி கழுத்தை அறுத்து ரூ.10 லட்சம் நகை‌க் கொ‌ள்ளை

இந்தியாவின் மதுரையில் நகை ‌வியாபா‌ரி ஒருவ‌ரி‌ன் கழு‌த்தை அறு‌த்த வியாபா‌‌ரி ஒருவ‌ர் 10 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌‌ள்ள நகைகளை கொ‌ள்ளையடி‌த்து‌ச் செ‌ன்று‌ள்ள ‌நிக‌ழ்வு மதுரை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. மதுரை நேதாஜி ரோடு ஜான்சிராணி பூங்கா அருகே வசித்து வரு‌ம் விலாஸ் (55) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவ‌ர். தங்கம், வெள்ளி நகைகளை உருக்கி வியாபாரம் செய்து வரு‌ம் ‌விலா‌ஸ், நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மதுரை புதூரைச் சேர்ந்த மணி (39) என்ற வாலிபர் 300 ‌கிரா‌ம் வெ‌ள்‌‌ளியை க‌‌ம்‌பியாக உரு‌க்‌கி தரு‌ம் படி வீட்டுக்கு வந்து‌ள்ளா‌ர்.

வேலை முடி‌ந்து வெள்ளி கம்பிகளுடன் புறப்பட்டு சென்ற மணி, சிறிது நேரத்தில் மீண்டும் ‌விலா‌ஸ் வீட்டிற்கு வந்து‌ள்ளா‌ர். அப்போது மணி‌யிட‌ம் ‌விசா‌‌ரி‌த்த விலாஸை கத்தியால் கழுத்தை அறு‌த்து‌வி‌‌ட்டா‌ர்.

வாயில் துணியையும் திணித்து கையையும், கால்களையும் கயிற்றால் கட்டிவிட்டு அவரிடம் இருந்த பீரோ சாவியை எடுத்து அங்கிருந்த 36 பவுன் நகை, 3 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டார் ம‌ணி.

கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விலாசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வ‌‌ந்து காவ‌ல்துறை‌க்கு தகவ‌ல் கொடு‌த்தன‌ர். ‌‌விரை‌ந்து வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் விலாசை மதுரையில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌த்தன‌ர்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையுடன் தப்பிய வாலிபர் மணி அடிக்கடி விலாஸ் வீட்டிற்கு வந்து வெள்ளிக்கட்டிகளை உருக்கி செல்வது விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான மணியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com