மட்டக்களப்பு கல்லடிப்பாலம் திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் ஜுலை மாதம் 01 ஆம் திகதி இரவு 11.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 2.30 மணிவரை மூடப்படுகிறது என நிர்மாணப்பகுதியினர் அறிவித்துள்ளனர். சுமார் 70 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தப்பாலம் ஜனாதிபதியின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அதி நவீன முறையில் புகிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பாலத்தை பயன்படுத்தும் கொழும்பு, திருகோணமலை, கதுறுவெல, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, பதுளை, பாணந்துறை, மூதூர் ஆகிய முக்கிய இடங்களில் இருந்து காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை, பொத்துவில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து வாகன சாரதிகளின் நலன்கருதி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம் சுனாமியின் பின்னர் புதிதாக நிர்மாணம் செய்யப்படுவதற்காக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் நிர்மாணப் பணிகளுக்காக முதன் முறையாக போக்குவரத்துக்குத் தடைப்படுத்தப் பட்டதுடன்,கடந்த 16 ஆம் திகதி இரண்டாவது தடவையாக மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment