ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதல் சட்டபூர்வமானது, நியாயமானது- USA
ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்கு தல்கள் குறிப்பாக ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்படும் குண்டுவீச்சுத் தாக்குதல் சட்டரீதியானதும், அறரீதி யானதும் ஆகும் என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவித்தும் அந்த எதிர்ப்புகளை அமெரிக்கா இந்த அறிவிப்பின் மூலம் துடைத்தெறிந்துள்ளது.
இந்தத் தாக்குதல் கறாரான வழிமுறைகளிலும், மிகவும் துல்லியமாகவும் செய்து வருகிறோம் என்று அமெரிக்க எதிர் பயங்கரவாத நடவடிக்கைக் குழுவின் முன்னிலை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டு பின்பு கடல் நீர் ஆழத்தில் புதைக்கப்பட்ட அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடன் கொலையுண்ட தினத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் ஒபாமாவின் எதிர்பயங்கரவாத நடவடிக்கைக் குழுவின் வலது கை ஜான் பிரெனன் இதனைக் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட வகையான அச்சுறுத்தலைச் சாமளிக்கவே 'டுரோன் அட்டாக்' என்று கூறப்படும் தூரக்கட்டுப்பாட்டு ஆளில்லா விமானத் தாக்குதல் என்கிறார் அவர்.
அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதப் போர் நடத்துவதாகக் கூரிய அல்குவைதாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளே இத்தகைய தாக்குதல்கள் என்று கூறுகிறார் அவர்.
வுட்ரோ வில்சன் மையத்தில் சர்வதேச ஸ்காலர்கள் மத்தியில் பேசிய பிரெனன், "தொலைக்கட்டுப்பாட்டு ஆளில்லா விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற வகையில் சர்வதேச சட்டத்தில் எதுவும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை எதிரிகளிடமிருந்து காக்க இருக்கும் உள்நாட்ட்ச் சட்ட விதிகளின் படி இந்தத் தாக்குதல்கள் முற்றிலும் சட்டபூர்வமானதே. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ராணுவப் படைத் தாக்குதலை பயன்படுட்த்த அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க காங்கிரஸால் அமல் செய்யப்பட்டது. இதனால் இவ்வகை தாக்குதல்கள் முழுதும் சட்ட பூர்வமானதே என்று கூறினார் பிரெனன்.
ஆனால் மக்களை குறிவைக்காமல் துல்லியமாக அட்சரம் பிசகாமல் தாக்குதல் நடத்துகிறோம் என்று அமெரிக்கா தொடர்ன்டு கூறிவந்தாலும் அது பொய்யே என்று மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். ஆனால் இவை மிகவும் அரிதே என்கிறது அமெரிக்கா.
அல்கடாவுக்கு எதிரான போரில் 4 முக்கியமான பயங்கரவாத குழுக்களை பிரெனன் அடையாளம் காட்டியுள்ளார். ஏமன் நாட்டில் உள்ள அல்கைடாவின் இரண்டு அமைப்புகள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் இயங்கும் இரண்டு அமைப்புகள் அமெரிக்காவின் இலக்குகளாகும் என்றார்.
அதேபோல் நைஜீரியாவில் புதிதாகக் கிளம்பியுள்ள போகோ ஹரம் என்ற அமைப்பும் அல்கைடாவின் வன்முறையான வழிமுறைகளுக்குள் வந்துள்ளதாகவும் அதனையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment