UPR ல் இலங்கையை மீளாய மூன்று நாடுகள்.
நவம்பர் 1 ல் இடம்பெற விருக்கும் பன்னாட்டுப் பருவகால மீளாய்வின் போது (UPR) இலங்கை தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகளை நியமித்துள்ளது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் (OHCHR). இந்த மூன்று நாடுகளும் அண்மைய இலங்கைக் கெதிரான ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் தீர்மான வாக்கெடுப்பில் அமெரிக்க பக்கம் நின்றவை.
அனைத்து 192 உறுப்பு நாடுகளிளனதும் மனிதவுரிமைப் பதிவுகளை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்வதே இந்த UPR ன் பணியாகும். இந்த UPR தான் தனது மனிதவுரிமைப் பதிவுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கடந்த HRC அமர்வுகளில் இலங்கை வற்புறுத்தி வந்தது.
UPR என்பது HRC ஆதரவுடன் அரசுகளால் மேற்கொள்ளப்படும் செயன்முறையாகும். இது ஒவ்வொரு நாடும் தனது நாட்டில் மனிதவுரிமையை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை வெளிப்படுத்தவும், தனது மனிதவுரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றவும் வாய்ப்பளிக்கின்றது என்கிறது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் (OHCHR). சபையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பன்னாட்டுப் பருவகால மீளாய்வானது (UPR), மனிதவுரிமை நிலைமைகள் மதிப்பீடு செய்யப்படும் போது ஒவ்வொரு நாட்டையும் சமத்துவமக நடாத்துகின்றது என்பது மேலும் குறிப்பிட்டது.
உரிமைகள் மற்றும் காவல்புரியும் அமைப்புகள் ஏப்ரல் 23 ல் தமது மதிப்பீடுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கொழும்பு அதன் 20 பக்க பதிலை மே 23 ல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 1 ல் இடம் பெறும் UPR செயன்முறைகள் இலங்கை மீது கடுமையானவையாக இருக்கு மென்றும், கொழும்பு பன்னாட்டு சமூகத்துக்கு ஆழமான ஒப்பியபொறுப்பை (commitment) காட்ட வேண்டிவரும் என்று இலங்கையின் உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment