TNA , UNP வுடன் கூட்டணி அமைத்து ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சரத் பொன்சேகாவை நிறுத்தியதற்கு ஒப்பாக, வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவி வேட்பாளராக அமைச்சர் ரவூப் ஹக்கீமை பொது எதிரணி சார்பில் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் தேசியக் கூட்டணி மற்றும் சிறிய முஸ்லிம் கட்சிகள் ஆகியன ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மு.கா.அதிவுயர் பீடத்தின் இரு உறுப்பினர்கள் சிறிய முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்குமாயின் ஐ.தே.க., த.தே.கூ., மு.கா. மற்றும் கட்சிகள் கி.மா.வில் தமது பலத்துக்கேற்றவாறு ஒரே பட்டியலில் வேட்பாளரை நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளன. அமைச்சர் பதவியில் இருப்பதை விட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
0 comments :
Post a Comment