அமெரிக்காவில் GL செனட் சபை உறுப்பினர்களை சந்தித்து நிலவரம் தொடர்பில் விளக்கினார்.
அமெரிக்கா சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் சபை உறுப்பினர் ஜோன் மெக்கேன் உள்ளிட்ட சில செனட் உறுப்பினர்களை சந்தித்தித்து பேச்சுவார்த்தை நாடாத்தியதுடன் இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தேசிய ரீதியான தீர்வொன்றை பெறுவதற்கு அடிப்படை நடவடிக்கைள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அந்;த சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்திருந்தார்.
அதனையடுத்து, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வுட்ரோ வில்சன் சர்வதேச மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், உரையொன்றையும் ஆற்றினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது முனைப்புகள் காட்டி வருவதாக அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் வாரமளவில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டனையும் சந்திக்கவுள்ளார்...
உள்நாட்டுத் தீர்வின் மூலம் இலங்கையில் நீடிக்கும் அமைதி, உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி என்பன ஏற்படுத்தப்படும் எனவும் சர்வதேச பரிந்துரைகளால் அவை செயற்படுத்தப்பட மாட்டாதெனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வொஷிங்கடன் சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. சிறந்த ஒரு வாய்ப்பை நாங்களே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்.
அது வெளிநாட்டுக் கொடுப்பனவாகவோ வெளிநாட்டுத் தயாரிப்பாகவோ இருக்க முடியாது. அது வரலாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. உள்நாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தீர்வு அனைவரும் விரும்பக்கூடியதாக இருக்கும்.
இலங்கை தமது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அர்த்தமுள்ள முறையில் அதனை செயற்படுத்த விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களில் 98மூ மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் புலிகளும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இன உறவை வலுப்படுத்த மொழி பயிற்சிகளை வழங்கி வருகிறோம். வடக்கில் மீன்படி, விவசாயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அதேபோல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வடக்கு கிழக்கில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சியும் முழு இலங்கையில் 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளது.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னதாக கடந்த செவ்வாயன்று வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோன் மிக்கெய்னை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன் பின்னர் செனட்டர் ஜிம் வெப்யையும், ஜேம்ஸ் இன்ஹோப்பையும் இக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இதேவேளை, நாளை மறுதினம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
0 comments :
Post a Comment