வரலாற்றில் முதல் முறையாக சோளம் இலங்கையிலிருந்து ஏற்றுமதி.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் முதல் முறையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வுள்ளது. இதன் முதற் கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் எதிர்வரும் 22 ஆம் திகதி கனடா மற்றும் தாய்வானுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
அநுராதபுரம் மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் பெரும் போகத்தில் அதிகளவு சோளம் விளைச்சல் ஏற்பட்டுள்ளதனால், இம்முறை இவ்விரு பிரதேசங்களிலும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் 18 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோ சோளம் தற்போது 35 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் சோளச் செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து சேளம் முதல் முறையாக ஏற்றுமதி செய்வதனை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment