ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய சம்பவம் தொடர்பில் நான்கு ஊழியர்கள் பணி நீக்கம்
வேயாங்கொடை, கீனவல உப ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் சிறுகாயங்களுக்கு இலக்காகியிருந்த சம்பவம் தொடர்பில் நான்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தின் போது பின்னால் வந்த ரயிலின் சாரதி மற்றும் சாரதி உதவியாளர் உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து காரணமாக ரயில் ஒன்றின் இரண்டு எண்ணெய்த் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் ரயில் போக்குவரத்து ஒருவழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment