யாழ் குடா நாட்டில் கோஷ்டி மோதல்கள் அதிகரிப்பு
யாழ் குடா நாட்டில் கோஷ்டி மோதல்கள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த மீசாலை மந்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த் இரு வேறு குழுக்களுக்கிடையே கடந்த சில நாட்களாக மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்களின் மோதல்களை நிறுத்த வழி தெரியாமல் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் திணறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவரைக் கேலி செய்ததைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை யாழ் நல்லூர் பகுதியிலும் இருவேறு குழுவினர் மோதல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வாள், கத்தி, கம்பு, பொல்லுகள் சகிதம் இவர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பின்னணி எதுவெனத் தெரிய வரவில்லை.
இதே போன்று நெல்லியடிப் பிரதேசத்திலும் இவ்வாறான குழுச் சண்டைகள் இடம்பெற்றுள்ளன.
0 comments :
Post a Comment