ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கில பாடத்தை பட்டப் படிப்பாக கற்றவர்கள் இல்லை –கல்வியமைச்சர்
இந்நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கில பாடத்தை பட்டப் படிப்பாக கற்றவர்கள் இல்லை. அதனால் ஆங்கில மொழி முலம் பயின்ற பட்டதாரிகளை ஆங்கிலம் கற்பிப்பதற்குச் சேர்த்துக் கொள்வதற்காக மீள விண்ணப்பம் கோருவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்காரினால் நிறுவப்பட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் ஸ்தாபகர் தினம் நேற்று கொழும்பு பிரதான தபால் நிலைய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டது. அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் உள்ளது. ஆனால் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.
இந்நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கில பாடத்தை பட்டமாக கற்றவர்கள் இல்லை. ஆகவேதான் அடுத்த அமைச்சரவையின் கூட்டத்தின்போது ஆங்கில மொழி முலம பயின்ற பட்டதாரிகளை ஆங்கிலம் கற்பிப்பதற்குச் சேர்த்துக் கொள்வதற்காக மீள விண்ணப்பம் கோர அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, மீள விண்ணப்பம் கோருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment