‘பான் கீ மூன்’ - ஆடியது கால்பந்து, உடைந்தது கையெலும்பு.
ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கால்பந்து வியையாடி கையை முறித்துக் கொண்டார். 67 வயதான பான் கீ மூன் ஐ.நா. வின் வெளிநாட்டு சேவை அலுவலர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் கீழே விழுந்ததால் இடது கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுதாக ஐ.நா.வின் பேச்சாளர் மாரட்டின் நெசர்கி குறிப்பிடுகின்றார். இதனால் ஆறுவார காலத்துக்கு பிளாஸ்டர் போடப்பட்ட கையை தோளில் கட்டித் தூங்கவிட்டவாறு இருக்க வேண்டும் என்று நெசர்கி மேலும் குறிப்பிடுகின்றார்.
கடந்த வாரயிறுதியில் ஐ.நா.தூதரகப் பிரிவின் வசந்தகால கால்பந்து போட்டியில் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்ததனால் கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் விசேட வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனினும் அவர் நல்ல சுகமாக இருப்பதாக நெசர்கி அறியத் தருகின்றார். இந்த விபத்துக்குப் பிறகு பான் கீ மூன் பனாமா வெளிநாட்டமைச்சர் ரொபடோ ஹென்றிக்கைச் சந்தித்த போது தான் கையைக் கட்டித் தூக்கியிருப்பதற்கு மன்னிப்பு கோரினார். எனினும் எழுதவும் கைலாகு கொடுக்கவும் முடியும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் மூன். தவறாமல் ஐ.நா. தூதராக அலுவலர்களுடன் கால்பந்து விளையாடும் வழக்கமுள்ளவர் பான் கீ மூன்
0 comments :
Post a Comment