ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வதேச தாதியர் தினம்
ஆராய்ச்சியின் மூலம் செம்மையாக்கப்பட்ட, சிறப்புமிக்க தாதியர் சேவையின் மூலம், இடைவெளியை நிரப்புவோம்|| என்பதே சர்வதேச தாதியர் தினத்தின் இன்றைய தொனிப்பொருளாகும். ஆரோக்கியமிக்க தொழிலாளர் படையொன்றை உருவாக்குவதற்காக வெற்றிகரமான சமூக சுகாதார அபிவிருத்தி செயல்த்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டியது தற்போதைய முக்கிய தேவையென சர்வதேச தாதியர் தினத்தை முன்னிடடு விடுத்துள்ள செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நவீன இலங்கையொன்றை உருவாக்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு பொருத்தமான வகையில் சுகாதார துறையில் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
0 comments :
Post a Comment