நீர்கொழும்பு – உடப்பு வத்தை பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் (காணொளி)
நீர்கொழும்பு – உடப்பு வத்தை பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களும் மீனவர் சங்கத்தினரும் இன்று முற்பகல் 11.30 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தினால் உடப்பு வத்தையில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மற்றும் சனசமூக நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
ஏத்துக்கால, சாந்த கிரிஸ்தோபர் மீனவ கூட்டுறவுச் சங்கத்திற்கு உரிமையான காணியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை,மீனவர் காரியாலயம் மற்றும் சனசமூக நிலையத்தை அகற்றி தனியாருக்கு ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்காக அந்த இடத்தை பிரதேச செயலகம் வழங்கவுள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment