கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை
கர்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டினை மேற்கொள்வதால், கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஐரோப்பியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
7000 கர்ப்பிணிப் பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆயினும், கடந்த 2010ம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கர்ப்பக்காலத்தில் உணவுக் கட்டுப்பாட்டினை மேற்கொள்வது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு சாத்தியம் இல்லை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கருத்தரிப்பதற்கு முன்னர் வயதுக்கு உரிய எடையை பெண்கள் அடைந்திருப்பது மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவர்கள்; பரிந்துரைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment