இவ்வாறு சென்றால் ருவான்வெலி ஸ்தூபமும் தோண்டப்படும்
புராதனச் சின்னங்களுக்கும் புதைபொருட்களுக்கும் சேதம் விளைவித்து அவற்றைக் கொள்ளையிட்டுச் செல்வது யாரென்பது நாறிந்த விடயம். ஆனால் பாதுகாப்புப் பிரிவினருக்கு மட்டும் அது தெரியமல் இருக்கின்றது என்று கூறுகின்றார் வண. மாதுலுவேவ சோபித தேரர் சொல்கிறார். அதே நேரத்தில் ‘வேலியே பயிரை மேய்கிறது அதை யாரிடம் சொல்வது’ என்பது இங்கு உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் வண. எல்லாவலை மேத்தாநந்த தேரர்.
பாதுகாப்புக்கு மத்தியில் புதையல் தோண்டுவது சாதாரண மக்களால் இயலாத செயல் எனக் கூறும் அவர் அரும் பொருட்சாலையில் (மியூசியம்) பொருட்களைக் கொள்ளை யடித்தவர்கள் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனக் குறைபட்டார்.
இரும்படிக்கும் நாட்டுக்குப் பஞ்சைத் தேடப் பலமில்லை’ என்று தொடர்ந்த வண. மேத்தானந்த தேரர் இவ்வாறான நிலை தொடருமானால், ருவான்வெலி செயாவும் தோட்டப்படும் நிலையேற்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறினார்.
0 comments :
Post a Comment