இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்தின்றி மக்கள் அவதி
குருநாகலிலிருந்து அல்கம ஊடாக கிரிலபொக்க வரை போக்குவரத்துச் செய்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்
சொந்தமான பஸ் அல்கம பாதையால் போக்குவரத்துச் செய்யாமையின் காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச சேவையாளர்கள், பிரதேசவாசிகள் கடுமையான பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் தெற்கு டிப்போவின் போக்குவரத்திற்குரிய ஒரே பஸ்ஸான குறித்த பஸ் அல்கம பாதையால் போக்குவரத்துச் செய்யாமையினால், அல்கமவிலிருந்து கிரலபொக்க ஊடாக குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் 3 கிலோ மீட்டரும் மற்றும் அலகமவிலிருந்;து வதாகடை வரை 2 கிலோ மீட்டரும் நடந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குருநாகல், கிரிலபொக்க, அல்கம ஆகிய பிரதேசங்களிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் அளவிலான பாதை கடுமையாக சேதமடைந்துள்ளதன் காரணமாகவே இந்த பஸ் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத காலமாக நடந்து பயணம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது குறித்து உரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment