குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு தினங்களில்
2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை இரண்டாம் கட்ட அறிக்கையானது இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது .
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் வெளிவரவுள்ளது.
இவ்வறிக்கையானது மாவட்ட ரீதியிலான சனத்தொகை மதிப்பீட்டினை உள்ளடக்கியதாகவும், 1981 மற்றும் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பீடு செய்யப்பட்டு வெளிவருமென குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளி விபரவியலாளர் திருமதி மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment