சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் யுவதியை பலாத்காரம் புரியமுயன்றவருக்கு பிணை
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் யுவதி ஒருவர் லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள தனது தங்குமிட அறையில் தனிமையில் தங்கியிருந்த போது, பலாத்காரம் புரிய முயன்ற நபரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுலைசெய்ய உத்தரவிட்டார்.
களுந்ரிகே ஆராச்சகே உதயகுமார என்பவரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார்.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த யுவதி கூக்குரல் எழுப்பியதை அடுத்து பிரதேசவாசிகள் ஒன்றுசேர்ந்து சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்டைத்துள்ளனர்.
சந்தேக நபர்ர் யுவதி தனது விருப்பத்திற்கு இணங்க மறுத்ததை அடுத்து கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளார் என விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment