Tuesday, May 15, 2012

'கோட்டாஸ் வோர்' (கோட்டாவின் யுத்தம்) நூல் வெளியீடு

எல்ரிரிஈ இயக்கம் ஒழிக்கப்பட்ட முறைகள் தொடர்பிலான தகவல்களை அடங்கிய ஷகோட்டாஸ் வோர்| எனும் நூல், ஜனாதிபதி தலைமையில் வெளியிடப்பட்டது. 30 ஆண்டுகாலமாக நீடித்தத பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் அடங்கிய விடயங்களை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. இதனை ஊடகவியலாளர் சி.ஏ. சந்திரபிரேம எழுதியுள்ளார்.

பத்தரமுல்ல, வோட்டர்ஸ் ஏஜ்ஜில் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நூலின் முதல் பிரதியை, ஜனாதிபதியிடம், நூல் ஆசிரியர் சந்திரபிரேம கையளித்தார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு தொடக்கம் பயங்கரவாதம் இலங்கையில் உருவாகுவதற்கான மூல காரணங்கள் மற்றும் பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகளை போன்று, மனிதாபிமான நடவடிக்கையூடாக, தாயகத்தை மீட்டெடுத்த வியூகங்கள் உள்ளிட்ட தகவல்கள், இந்நூலில் அடங்கியுள்ளன.

ஜனாதிபதியின் தலைமையுடன், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை, வெற்றியடைவதற்கான அடிப்படை அம்சங்களை மையமாக வைத்தே, ஷகோட்டாஸ் வோர்| நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, ஜனாதிபதியிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு, தூரநோக்கு, முப்படை தளபதிகளின் அர்ப்பணிப்புகள், எல்ரிரிஈ உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்ட தமிழ் அரசியல் வாதிகளுடனான கலந்துரையாடல்களும், இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர், நூல் தொடர்பான விசேட உரை நிகழ்த்தினர்.
 
 
இந்த நூலில் வடமராட்சி நடவடிக்கை தொடர்பாக, பிரத்தியேக அத்தியாயமொன்று காணப்படுகிறது. இந்த நடவடிக்கையின்போது, கோட்டாபய, மிகப்பாரிய பொறுப்பை நிறைவேற்றியுள்ளார். இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்ட போது, அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும், இந்தியாவிலிருந்து பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் அப்போது யுத்தம் கைவிடப்பட்டது. இதற்கு மேலாக, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலகட்டத்தில் யுத்தத்தை நிறுத்துமாறு, பல்வேறு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு வருகை தந்தனர். எனினும், ஜனாதிபதியோ, கோட்டாபயவோ, யுத்தத்தை நிறுத்தவில்லை. இன்றும் எமது ஜனாதிபதி, அதிகாரத்தில் உள்ளார். எனினும், அன்று யுத்தத்தை நிறுத்துவதற்கு, அறைகூவிய வெளிநாட்டு அமைச்சர்களை பதவி கவிழ்ப்பதற்கு, அந்நாட்டு வாக்காளர்கள் நடவடிக்கை எடுத்தனர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இந்த நூலை ஒரு தடவையன்றி, பல தடவைகள் வாசிப்பதற்கு, தூண்டுவதாக அமைந்துள்ளது என, தெரிவித்தார்.

இந்த நூல் சரளமாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் இருள் நிறைந்த வரலாற்றை அறிந்து கொள்வதற்கு, இந்நூல் சிறந்த விளங்குகின்றது. பயங்கரவாதத்தின் கொடுமைகள் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்நூலை வாசித்து முடியும்போது, எனக்கு எந்தவித வருத்தமும் ஏற்படவில்லை. ஏனெனில், இதற்கு காரணம் இது கோட்டாபாய செய்த யுத்தமாகும். இதற்கு மஹிந்த ராஜபக்ஷவே, தலைமைத்துவத்தை வழங்கினார்.
ஷகோட்டா வோர்| நூல், ஜெனரல் சரத் விஜயரட்ன மன்றத்தினால் வெளியிடப்பட்டது. இம்மன்றத்தின் தலைவியும், துருக்கிக்கான இலங்கை தூதுவருமான பாரதிய விஜயரட்ன, வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com