நாடெங்கும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வெசாக் வாரம் (படங்கள்)
நாடெங்கும் வெசாக் வாரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் வெசாக் பந்தல்கள் (தோரணங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் பல்வேறு அமைப்புக்களினாலும் பிரதேச மக்களினாலும் தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீதிகளிலும் வீடுகளிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.பெரும் எண்ணிக்கையான மக்கள் வெசாக் பந்தல்களை பார்வையிட்டு வருகின்றனர்.
வழமை போன்று வெசாக் கொண்டாட்டத்திற்காக நாட்டின் நாலாபாகங்களிலும் இருந்தும் கொழும்பிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
கொழும்பு நவலோக்க தோரணம்
நீர்கொழும்பு- கடோல்கல தோரணம்
கொழும்பு கிரேண்ட்பாஸ் தோரணம்
கட்டுநாயக்க பிரதேசத்தில்
0 comments :
Post a Comment