நாய் கடித்தால் எஜமானருக்கு சிறை:பிரிட்டனில் புதிய விதிமுறை அமல்
யாரையாவது நாய் கடித்தால், அந்த நாயின் எஜமானருக்கு ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் பிரிட்டனில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாயை வளர்ப்பவர்களின் அலட்சிய போக்கால் இந்த நிலை ஏற்படுவதை உணர்ந்த லண்டன் கோர்ட், "ஒரு நபரை நாய் கடிக்கும் பட்சத்தில், அந்த நாயின் எஜமானருக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
ஒரு குழந்தையையோ அல்லது முதியவரையோ நாய் கடித்தால் அந்த நாயின் எஜமானருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒரே நாய் மீண்டும் மீண்டும் பலரை கடித்தால் அந்த நாயின் எஜமானருக்கு ஒன்றரை ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும். கடந்த 91ம் ஆண்டு இயற்றப்பட்ட வெறிநாய் தடுப்பு சட்டப்படி, அதிக பட்சம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்க வழி செய்யும் விதிமுறை தொடர்ந்து அமலில் இருக்கவும், நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment