வடமேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளில் தற்போது சேவையாற்றும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கில மொழி தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய வடமேல் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, வடமேல் மாகாணத்தில் 2000 ஆசிரியர்களுக்கு குறுகிய கால மொழி பயிற்சி வேலைத்திட்டம் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மொழிப் பயிற்சி வேலைத் திட்டத்திற்காக தேசிய மொழி மற்றும் சமூக நல்லிணக்க அபிவிருத்தி அமைச்சும் கலாசார மற்றும் கலை விவகார அமைச்சும் தேவையான வளப் பங்கீடுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment