யுத்த வெற்றி பெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு தின விழாவையிட்டு சில வீதிகள் மூடப்படுகிறது
இறுதிக்கட்ட யுத்த வெற்றி பெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு தின விழாவை முன்னிட்டு சில வீதிகள் நாளை மூடப்படவுள்ளன.
இந்த வீதிகள் நாளை அதிகாலை 5 மணியிலிருந்து மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, பகதல வீதிக்கும் காலிமுகத்திடல் சுற்று வட்டாரத்திற்குமிடையிலான வீதி, கொள்ளுப்பிட்டி ரயில் சந்தியிலிருந்து கிலென் ஆபர் வரையான வீதி, தர்மபால மாவத்தையில் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்படுகிறது.
அதேபோன்று, ஸ்ரீஉத்திரனாந்த மாவத்தையில் நவம் மாவத்தையிலிருந்து மாக்கன் மார்கார் வீதியும்,ஜஸ்ரிஸ் அக்பர் மாவத்தையிலிருந்து மாக்கன் மார்கார் சந்தி வரையான வீதி, கலதாரி சுற்றுவட்டத்திலிருந்து லோட்டஸ் வீதி ஆகியனவே நாளைய தினம் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனால், குறித்த வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment