பொன்சேக்கா ஏழு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது - சட்ட மா அதிபர்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு நிபந்தனைகளுடனான விடுதலையே வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேக்காவிற்கு 7 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் எவ்வாறாயினும், வாக்களிக்கும் உரிமை உள்ளதாகவும் ஈவா வனசுந்தர நியூஸ்பெஸ்டிற்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு எஞ்சியுள்ள சிறைத்தண்டனை காலத்திற்கே மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, முன்னாள் இராணுவத் தளபதி தொடர்ந்தும் தண்டனையை அனுபவித்து வரும் ஒருவராகவே கருதப்படுவார் எனவும் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற வீரர்களுக்கு அடைக்கலம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு அவருக்கு எதிராக விசாரணையில் உள்ளதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment