பாதுகாப்பு காரணங்களுக்காக விமான த்தில் பயணம் செய்யும் போது கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என வெர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வசதியின் மூலம் இனி வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் எ330 ஏர்பஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பயனபடுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எ330 ஏர்பஸ் விமானங்களில் இருக்கைகளுக்குள் இருக்கும் ஜெனரல் பாக்கட் ரேடியோ சேவை மூலம் இவ்வசதியை பெற்றுக்கொள்ளாம்.
விமான பயணத்தின் போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதையிட்டு பெருமிதமடைவதாக வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஸ்டீவ் க்ரிபித்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சேவையை அனுபவிக்க பயணிகள் சற்று கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது இந்த கையடக்க தொலைபேசி சேவைகளை ஒரே நேரத்தில் 6 பேர் பயன்படுத்த நிமிடத்திற்கு 1.2அமெரிக்க டாலர்களை வசூலிக்படுதின்றது என தெரிவித்த வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம், இந்த சேவையை தனது போயிங் 747 விமானங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment