தாய்லாந்து அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவை தாய்லாந்தின் துணைப் பிரதமர் வரவேற்றார்.இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பொன்தே வொர்ச்சட், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் இதில் பங்கேற்றார்கள்.
2600வது சம்புத்தத்வ ஜயந்தியை முன்னிட்டு பேங்கொக் நகரில் நாளை மறுதினம் இடம்பெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கும் சந்தர்ப்பம் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை “சம்புத்தத்வ ஜயந்தி மூலம் மனித இனத்திற்குக் கிடைக்கும் நலன்” என்ற தலைப்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாய்லாந்து பிரதமர் திருமதி யின்லக் சினவாத்ராவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். குற்றச்செயல்களை தடுப்பதற்காக சட்ட உதவிகளை பரிமாறிக்கொள்வது பற்றிய உடன்படிக்கையிலும் அவர்கள் கைச்சாத்திடுவார்கள்.
தாய்லாந்து அரச குடும்ப இளவரசிரயும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
புத்தபெருமான் ஞானம் பெற்று 2600 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு எதிர்வரும்31ம் திகதி தாய்லாந்தில் நடைபெறும் புத்த ஜயந்தி அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம்2ம் திகதி புத்தரின் போதனைகளால் மனிதகுலத்திற்கு கிடைத்த நன்மைகள் என்ற தொனிப்பொருளில் அவர் உரையாற்றுவார்.
இலங்கை ஜனாதிபதி தாய்லாந்து வர்த்தக சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். தொடர்ந்து இருதரப்பு வர்த்தகர்கள் பங்கேற்கும் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment