இலங்கையிலிருந்து அரிசி ஏற்றுமதியாகிறது.
பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்து வருவதாகவும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந் தோட்டை மாவட்டங்களில் மாத்திரம் தொடர்ந்தும் நெற் கொள்வனவு இடம்பெறுகிறது என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவின்கின்றது.
ஒருலட்சத்து பத்தாயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான நெல் இதுவரை கொள்வனவு செய்யப்பட்டதாக வும் இதற்காக ஏறத்தாழ 300கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் அரிசியில் தன்னிறைவு கண்டுள்ளதால் அரிசியை ஏற்றுமதி செய்யும் திட்டமும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என சபையின் தலைவர் கே.பி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை மூவாயிரம் மெற்றிக்தொன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மத்தியகிழக்கு மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய எதிர்ப்பார்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment