ஐ பீ எல்லில் ஆட்ட நிர்ணய சதியா?
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தயாராக உள்ளது. இது தொடர்பாகக் கலந்துரையாட அவசர கூட்ட மொன்றையும் இச்சபை கூட்டியுள்ளது.
இந்தியாவுஏ என்ற தொலைக்காட்சி நிறுவனம் இது தொடர்பான காட்சிகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இதில் சில புதிய வீரர்கள் வேண்டுமென்றே சட்டவிரோத பந்துவீச்சில் ஈடுபடுவது காண்பிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குறித்த வீரர்களுக்கும், அணியின் உரிமையாளர்களுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment