சுங்க பிரிவின் மத்திய புலனாய்வு பிரிவினரல் யானைத்தந்தம் கடத்தல் முறியடிப்பு
இலங்கை சுங்க பிரிவின் மத்திய புலனாய்வு பிரிவினரால் சட்டவிரோத சர்வதேச யானைத்தந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சுங்கதரப்பினர் தெரிவிக்கின்றனர்.இலங்கை சுங்க வரலாற்றில் இடம்பெற்ற முதலாவதும் மிகப்பெரியதுமான முற்றுகை இதுவென சுங்கதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
விலைமதிப்பற்ற இந்த யானைத்தந்த கொள்கலன் கென்னியாவிலிருந்து ஓமான் ஊடாக டுபாய்க்கு எடுத்துச் செல்லப்படவிருந்த நிலையினேலே .இலங்கை சுங்க அதிகாரிகளின் மிகத் திறமையான நடவடிக்கைகள் காரணமாக இலங்கை துறைமுகத்தில் வைத்து இந்த மோசடி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்கிடமான 3 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட போது இந்த யானைத்தந்தங்கள் அடங்கிய கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மீள்சுழற்சி, மூலப் பொருட்களுடன் இவை பைகளில் பொதி செய்ப்பட்டிருந்ததாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இம்மோசடியில் இலங்கையர்கள் சம்பந்தப்படவில்லையென தெரியவந்துள்ளது. இம்முற்றுகை சர்வதேச சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டியுள்ளது. 250 இற்கும் மேற்பட்ட ஆபிரிக்க யானைகள் கொலை செய்யப்பட்டு இந்த யானைத்தந்தங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணகைளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச ரீதியில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க அத்தியட்சகர் ஜே.எ.எஸ்.ஜயகொடி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment