இலங்கையில் பிளாஷ்டிக் கைத்தொழில் துறையை தரமுயர்த்த நடவடிக்கை
இலங்கையில் பிளாஷ்டிக் கைத்தொழில் துறையை தரமுயர்த்த கைத்தொழில் வணீக துறை அசைச்சும், ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பும், இணைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான சர்வதேச பிரதிநிதிகள் குழு இன்று அமைச்சரை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். இத்துறைக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப கட்ட முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இலங்கையில் ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர், இலங்கையில் 400 கம்பனிகள் பிளாஸ்டிக பொருள் உற்பத்தியிலும் பதனிடலிலும் ஏற்றுமதியில் ஈடுபடுவதாக மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment