பிரான்ஸ் உயர்ஸ்தானிகரின் மலையக விஜயம்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் கிறிஸ்டின் மனித அபிவிருத்தி தாபன அலுவலகத்தில் தாபன தலைவர் திரு. பி. பி. சிவப்பிரகாசம் அவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (2012.05.11) அன்று மலையக கல்வி நிலமை, தொழில் சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் என்பனற்றின் நிலமையை ஆராயும் கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டார்.
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் தொழில் செய்வதற்காக பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பெருந்தேட்டத்துறை மக்கள் சுமார் 180 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கை தரம் அண்மைக் காலங்களில் ஓரளவு மாற்றம் கண்டாலும், மாற்றம் காணவேண்டிய பல விடயங்கள் நிறையவே இருக்கின்றது.
இந்நிலையில் இவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களை பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் நோக்கில் மனித அபிவிருத்தி தாபனம் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் கிறிஸ்டனை மலையக தோட்டப்பகுதிகளுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தது.
இதற்கிணங்க இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக தெல்தோட்ட பட்டவீர பிரதேசத்திற்கு கள விஜயத்தை மேற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் வழ்க்கை பிரச்சினைகளையும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் நேரடியாக பார்வையிட்டார்.
இதில் மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் திருமதி. லோகேஸ்வரி கருத்துக்களை தெரிவித்தார்.
பிரான்ஸ் தூதுவர் இலங்கையில் வாழ்கின்ற மக்களின் நிலைமை குறித்து அறிந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடாபான பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள விரும்பினார். அதன் அடிப்படையில் நேரடியாக மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ளவதற்கான அவரை அழைத்து வந்தோம்.
இன்றைய சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை பிரான்ஸ் நாட்டு மக்களும் அரசாங்கத்திற்கும் தெரியவைப்பதனூடாக எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், தொழிலாவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எதாவது ஒரு மாற்றத்தை கொன்டுவருவதற்காகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த காலங்களிலும் பிரான்ஸ் நாட்டு தூதுவராயல அதிகாரிகள் மலையக பிரதேசங்களுக்கு வருகைதந்துள்ளனர். எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளமையும் முக்கியவிடயமாகும்.
எனவே இந்த முறை மேற்கொள்ளப்பட்ட விஜய்தின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என்று அவர் அங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திருமதி. பி. லேகேஸ்வரி, மற்றும் மனித அபிவிரத்தி தாபன கள உத்தியோகத்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் மனித அபிவிருத்தி தாபன கள இணைப்பாளர் திரு. ஆர். நடராஜா, கிரேட்வெளி தமிழ் வித்தியாலய அதிபர். திரு. பொன்னம்பளம், மனித அபிவிருத்தி தாபன உத்தியோகத்தர்கள் திரு. லோகரட்னம், திரு. மோகன், திரு. ஜெயபால், திரு. தமிழ்வானன், செல்வி. மேகலா, செல்வி. பர்ஹானா, மற்றும் தோட்ட பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தோட்ட தலைவர்கள் ஆகயோரும் பங்கபற்றினர்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment