பீரிஸ் - ஹிலரி சந்திப்பு. இலங்கையின் நடவடிக்கை மகிழ்ச்சியடைவதாக ஹிலரி தெரிவிப்பு
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த நாட்டின் இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச் சந்திப்பின் போது, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கிளாரி கிளிங்டனிடம் கையளித்ததுள்ளதுடன், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் சம்பந்தமாக கலந்துரை யாடப்பட்டதுடன், இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மகிழ்ச்சியடை வதாகவும், ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment